Surprise Me!

#Naachiyar Review #நாச்சியார் விமர்சனம் #Jyothika #GVPrakash

2018-02-16 73 Dailymotion

எளிய மனிதர்கள், காக்கிச் சட்டைகள், ஒரு புறம் மனித மிருகங்கள், இன்னொரு பக்கம் மனிதாபிமானிகள், போகிற போக்கில் முகத்தில் அறைந்து செல்லும் யதார்த்தங்கள் என வாழ்வின் பல கூறுகளை பாலாவின் பெரும்பாலான படங்களில் பார்க்கலாம். ஒரு சில படங்களில் இவற்றுக்கு இடையே வன்முறை மிகுந்திருக்கும்... நாச்சியாரும் இந்த வரையறையிலிருந்து தப்பவில்லை. பாலாவிடமிருந்து அவரது பாணியில், ஆனால் கொஞ்சம் அவசரமாக வந்திருக்கும் படம், நாச்சியார்.

சின்ன கதைதான். கிட்டத்தட்ட பார்த்த கதையும் கூட. அதை பாலா தன் பாணியில், எளிய மனிதர்களின் ஈரமிக்க வாழ்க்கைப் பின்னணியில் தந்திருக்கிறார். வழக்கமான பாலா படங்களை விட இந்தப் படத்தின் நீளம் குறைவு. வசனங்களில் வழக்கமான பாலாத்தனம். சில இடங்களில் நறுக்குத் தெறிக்கும் நக்கல், நய்யாண்டி. குறிப்பாக அடிக்கடி பிறக்கும் புதிய இந்தியா குறித்த பாலாவின் க்ளைமாக்ஸ் வசனம்.


Bala's Jyothika starrer Naachiyaar review. The movie is watch worth for its humanitarian narration and conveys some positive vibes.