Surprise Me!

நாகூர் தர்ஹாவின் 469 ஆம் ஆண்டு கந்தூரி விழா!

2025-11-18 5 Dailymotion

நாகப்பட்டினம்: நாகூர் தர்ஹாவின் 469 ஆம் ஆண்டு கந்தூரி விழா தொடங்க இருப்பதை முன்னிட்டு விழாவின் தொடக்க நிகழ்வாக பாய்மரம் ஏற்றப்பட்டது .

நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் ஆண்டவர் தர்ஹாவின் 469 ஆம் ஆண்டு கந்தூரி விழா வரும்21 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. இதையொட்டி நாகூர் ஆண்டவர் தர்ஹாவில், பாரம்பரிய முறைப்படி பாய்மரம் ஏற்றும், நிகழ்வு இன்று அதிகாலை நடைபெற்றது. நாகூர் தர்ஹா மத நல்லிணக்கத்தின் சின்னமாக விளங்குவதுடன் இங்கு வெளி மாவட்ட, வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்தும் தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.  

ஆண்டுதோறும் நடைபெறும் பெரிய கந்தூரி விழா கோலாகலமாக நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான கந்தூரி விழா 21 ஆம் தேதி கொடியேற்றத்துன் தொடங்க இருப்பதையொட்டி நாகூர் ஆண்டவர் தர்ஹாவில் தலைமை அறங்காவலர் செய்யது முகமது ஹாஜி உசேன் சாஹிப் தலைமையில் சிறப்பு துவா ஓதப்பட்டு பாய் மரம் ஏற்றும் நிகழ்ச்சி தொடங்கியது.

மங்கள வாத்தியங்கள், அதிர்வேட்டுக்கள் முழங்க முதலில் சாஹிப் மினாராவில் பாய்மரம் ஏற்றப்பட்டு பின்னர் தஞ்சை மன்னர் கட்டிக் கொடுத்த தர்ஹாவின் அலங்கார வாசலிலில் உள்ள பெரிய மினாரா, தலைமாட்டு மினரா, ஓட்டு மினரா, முதுபக் மினா என 5 மினாராக்களிலும் பாய்மரங்கள் ஏற்றப்பட்டன. பாய்மரம் ஏற்றும் நிகழ்ச்சியில் மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக மும்மத பக்தர்கள் பங்கேற்று நாகூர் ஆண்டவரை தரிசனம் செய்தனர்.